திருச்சியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பீம நகர், வயலூர் சாலை, அல்லித்துறை, போச்சம்பட்டி மற்றும் சமயபுரம் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு படமால் இருக்க மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்திலும் விளம்பர நோக்கத்தில் வெறும் எண்ணிக்கைக்கா பல நூறு மரகன்றுகளை நடவு செய்து அதை வளர்க்காமல் விட்டு விட கூடாது என்பதை கொள்கையாக வைத்து செயல்பட்டு வரும் மாற்றம் அமைப்பின் சார்பில் அதனை பொதுமக்கள் கல்லூரி மாணவிகள் மத்தியில் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்
நாம் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் இருக்கும் குறைந்த இடத்தில் சிறு மரங்களை யாவது நட்டு வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலும் பொதுமக்கள் கல்லூரி மாணவிகளுக்கு பழ வகையிலான கொய்யா சீதா எலிம்பிச்சை சீதா உள்ளிட்ட மரகன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதை பெற்று கொண்ட பொதுமக்கள் மாணவிகள் தங்களது வீட்டில் மரகன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர்.
இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரும் தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற நடிகரும் இயக்குனருமான ஆர். ஏ. தாமஸ் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம் மகளிர் பிரிவு இணைச் செயலாளர் அல்லிகொடி வழக்கறிஞர் பூபாலன் அகிலாண்டேஸ்வரி பிரபாவதி சுகுணா மோகணபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரகன்றுகளை வழங்கினர்.