தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவனைத் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, கழக இலக்கிய அணி துணை செயலாளர் பேராவூரணி திலீபன், தலைமை கழக பேச்சாளர் வடமதுரை பாலு, மாவட்ட துணைச் செயலாளர்வனிதா, புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், கவுன்சிலர் அம்பிகாபதி
மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி, வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார் துணை தலைவர் முத்துமாரி, துணை செயலாளர் முல்லை சுரேஷ், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பாக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.