திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியும் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தெற்கு சேர்பட்டியில் ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பாலை விவசாயி தலையில் ஊற்றி ஆர்ப்பாட்டம்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாகண்ணு மனோ தங்கராஜ் திருச்சி வந்த பொழுது திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள தெற்கு சேர்பட்டியில் இருந்து காலை, மாலை என சுமார் 450 லிட்டர் பாலை வடக்கு சேர்ப்பட்டிக்கு எடுத்துச் செல்ல முடியாததால் இங்கேயே சொசைட்டி ஆரம்பித்து கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். தனியார் 24 ரூபாய் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், அரசு 34 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர் என்பதையும் அவரிடம் தெரிவித்தோம். உடனடியாக கொள்முதல் திறக்க உத்தரவிட்டார். ஆனால், அதிகாரி தனியாருக்கு விற்றால் பணம் கிடைக்கும் என்பதால் திறக்க மறுக்கிறார். தனியாருக்கு சாதகமாக செயல்படுகிறார். இந்த வாரம் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை என்றால் வாரம், வாரம் இது போல நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.