இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில் என்னை கௌரவித்தது தமிழ் சாங் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கு நன்றி செலுத்துகிறேன். தமிழகத்தில் இது பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2026 ம் ஆண்டு நடை பெறக்கூடிய தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் யூகங்களும், அரசியல் எதிர்பார்ப்பவர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள திராவிட மாடல் அரசு தமிழகத்தில் இதுவரை செய்த நல்ல காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. 2026 ல் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். இந்தியா, இலங்கை ஒரு உணர்வுகளாக இருக்க வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசு உதவிகள் செய்து வருகிறது. தமிழக மீனவர்களை காக்கும் வகையில் புதிய திட்டத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இந்தோ- இலங்கை ஸ்ரீலங்கா பிஷரீஸ் கார்ப்பரேஷன் என்ற ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் அது அவர்களை உறுப்பினர்கள் சேர்த்து கச்சத்திவில் மீன் பிடிக்க உரிமையை வழங்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழகத்துடன் தொடர்ந்து கூட்டணி என்பது கொள்கை ரீதியானது.

திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கூட்டணியை விட்டு வேறு கூட்டணி சிந்திப்பதே கிடையாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகள் வழங்க வேண்டும் என்பது பொதுவான கருத்து நிலவுகிறது. அதன்படி திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சை எதிர்பார்க்கிறோம். தமிழக அரசு பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டது.ஜி எஸ் டி டிகொள்கை குறித்து அனைத்து மாநிலம் குறித்து ஆலோசனை கேட்டார்கள். அதில் சிரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை நாடு வரவேற்றுள்ளது. ஜி எஸ் டியில் நடைமுறைப்படுத்திய ஆலோசனையின் படி உங்க திட்டத்தில் கொள்கைகளும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் அறிவித்தால் நன்றாக இருக்கும் இதை நான் வரவேற்கிறேன். குடந்தையில் மஹல்லா ஜமாத் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து டிசம்பர் 28ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது. ஜனவரி 8ந்தேதி கேரளா இஸ்லாமிய கலாச்சார அமைப்பு சார்பில் மும்மத திருமணம் திருச்சியில் நடைபெற உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் சீமான் தனியாக நிற்கிறார் வேட்பாளர் அறிவித்து வருகிறார். தமிழகத்தில் மூன்று அணியாக போட்டியிருக்கும். அதிமுக, பா.ஜக, த வெக மூன்று ஒன்றிணைந்தால் திமுக சவாலாக இருக்குமா என்று கேட்டதற்கு தேர்தலே சவாலாக இருக்கும். மக்கள்தான் எஜமானர்கள். திராவிட மாநில அரசுக்கு மக்கள் வெற்றியை தேடித் தருவார்கள் இது யுகம் அல்ல, நம்பிக்கை.இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.

இந்த பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாநில துணைச் ஹாஜி வி. எம். பாரூக், திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் மாவட்டவர் அஜீம், திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல் காதர், மாநில மகளிர் அணிசெய்லாளரும், ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலர் ஷமீம் நிஷா, திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரிபா, மாநில அயலக அணியின் துணைத்தலைவர் என். கே. அமீருதின், திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஆட்டோ அப்துல் சலாம், திருச்சி தெற்கு தொண்டரணி தலைவர் காஜா அலாவுதீன், கே. எம். சி. சி. நிர்வாகி அப்துல் சமது மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *