பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாவட்ட மதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அருகில் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், சேரன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சந்திரா ஜெகநாதன், பகுதி செயலாளர்கள் ஜங்சன், செல்லத்துரை, ஆசிரியர் முருகன்,வினோத்,மனோகரன்,சி ஆர்.ராமமூர்த்தி கரிகாலன்,ஜெயசீலன் உள்பட பலர் உள்ளனர்.
