திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலை திருச்சி தில்லை நகர் கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல் .ஏ,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஸ்ரீதர்,மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா,திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், கலைச்செல்வன், ஆற்றல் அரசு, மண்டல செயலாளர் தமிழாதன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெள்ள மண்டி சோமு, டி.டி.சி .சேரன்,மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது,

மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா ,மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முகமது ஷெரீப்,மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஷ் பாஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரகுமான்,பேராசிரியர் மைதீன்,அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் வெங்கடேசன்,திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், ஆதித்தமிழர் பேரவை செங்கை குமுலி,மக்கள் நீதி மய்யம் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார்,மாநகர செயலாளர் சீனிவாசன் உள்பட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வருகின்ற 11-ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எஸ்.ஐ.ஆர். கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து நடைபெற விருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மிக சிறப்பாக நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவது , நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர். க்கு தொடக்க முதல் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசின் கைப்பாவையாகவும், ஏதேச்சதிகார போக்குடனும் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
