தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொது குழு கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவராக மீண்டும் டைமண்ட் ராஜா வெள்ளையன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் இக்கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன்….. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு மட்டத்திலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் புதிதாக ஐடி விங் உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார். திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யாமல் அதே இடத்தில் வியாபாரிகள் வணிகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்த சுதேசி மளிகை என்ற பெயரில் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்து நமது பேரவையில் உள்ள உறுப்பினர்களின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு வர்த்தகத்தை சீர்குலைக்கக்கூடிய அந்நிய வர்த்தக நிறுவனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும்

அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியையும் மருத்துவத்திற்கான ஜிஎஸ்டி வரியையும் முற்றிலும் குறைக்க வேண்டும், தமிழகத்தில் அராஜகமான முறையில் மாமூல் கேட்டு வசூல் செய்யும் ரவுடிகளை மாநில அரசு கடுமையான சட்டம் இயற்றி தண்டிக்க வேண்டும் எனவும் சாலையோர வியாபாரிகளுக்கும் சிறு குறு வணிகர்களுக்கும் சகோதரர் உறவை மேன்மைப்படுத்திட சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காப்பாற்ற அரசு உடனடியாக அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
