திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூபாய் 119.22 கோடி மதிப்பீட்டில் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த

174 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர். கங்காதாரணி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
