தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சங்கரப் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சதீஷ், மாநில பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் தலைவர் செல்வகுமார் கடந்த ஆண்டு சங்கத்தின் செயல்பாடு குறித்து பேசினார். திருச்சி மாவட்ட தலைவர் புகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். கூட்டத்தில் மாநில செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் பாரதியார் தின குடியரசு தின குறுவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியினை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக வழங்கப்பட வேண்டும்.அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா உடற்கல்வி பாட புத்தகங்கள் மற்றும் பாட புத்தகங்களுடன் சேர்த்து வழங்க வேண்டும்.உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடல்கல்வி இயக்குனர்களுக்கு நியமன கல்வி தகுதிக்கு மேல் பெற்ற உயர்கல்வினை வரிசை படுத்தாமல் இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

குறுவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். குறுவட்டம் வருவாய் மாவட்டம் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு நிதியினை உரிய முறையில் பள்ளிகளில் வழங்க வேண்டும். மாநில அளவில் விளையாட்டு போட்டிகள் பள்ளி வேலை நாட்களில் நடைபெறும் வண்ணம் அட்டவணைகள் தயார் செய்யப்பட வேண்டும் குறிப்பாக தமிழக அரசு வழங்கும் விளையாட்டு உபகரணங்கள் தரமானதாக இல்லை அதிலும் பிரைமரி பள்ளிகளுக்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களை ஹை ஸ்கூல் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது அதுவும் தரமற்ற விளையாட்டு உபகரணங்களாக உள்ளது பள்ளி மாணவர்களுக்கு தரமான விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில்திருச்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்