திருச்சி மாவட்டம் குழுமணி அக்ரகாரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி ஜீர்ணோர்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற இன்று நடைபெற்றது முன்னதாக கடந்த 29-ம்தேதி கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுவதற்காக ஜீயபுரம் பகுதியில் உள்ள காவிரி கரையில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் தீர்த்த குடத்தை யானை மீது வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அர்ச்சகர் மூலம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பக்த கோடிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் கல்யாணராம பட்டாட்சாரியார் சுவாமி செய்து இருந்தார்.
