தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று நடைபெற்றது. தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 12ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலை நேப்பியர் பாலம் அருகில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அச்சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர். பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். டி என் சி எஸ் சி எடை தராசும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஐஏஎஸ் தலைமையில் ஊதிய மாற்ற குழு அமைத்து ஒன்பதாவது மாநில ஊதிய மாற்றக் குழுவில் சேர்க்கப்பட வேண்டும். விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் இணையதள சேவையை மேம்படுத்தப்பட வேண்டும். அனைத்து நியாய விலை கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும். தாயுமானவர் திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் களையப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளும் கட்சி கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்குபெறும் மாநிலம் தழுவிய மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் என தெரிவித்தனர்.
