திருச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் (Rotary Club of Trichy Diamond City Elite), இன்னர்வீல் கிளப் ஆஃப் திருச்சி ராக்போர்ட் (Inner Wheel Club of Tiruchi Rockfort), ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ரிவர்டவுன், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி மெட்ரோபாலிட்டன், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி நெக்ஸ்ட் ஜென், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ட்ரீமர்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி மெஜெஸ்டிக், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி பட்டர்ஃபிளைஸ், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ராயல், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி தென்றல், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி பீனிக்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டிசி குயின்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ஐ டொனேஷன் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ஜம்புகேஸ்வரம் ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய ‘ட்ரீம் டிசம்பர்’ (Dream December) எனும் பிரம்மாண்ட சமூக சேவை திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

10 நாட்களில் 101 சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் தொடக்கமாக, இன்று காலை திருவானைக்காவல் அம்மா மண்டபம் அருகில் ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி’ (Cervical Cancer Awareness Rally) நடைபெற்றது. இப்பேரணியை ரோட்டரி மாவட்ட ஆளுநர் (RID 3000) Rtn. கார்த்திக் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Srimad Andavan Arts and Science College) மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாணவிகள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு, அம்மா மண்டபத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கல்லூரி வளாகத்தை அடைந்தனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.

பேரணியின் நிறைவாக கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஹர்ஷமித்ரா புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் Dr. சசிபிரியா கோவிந்தராஜ், பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி மற்றும் தடுப்பு முறைகள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் தலைவர் Rtn. ஜோசப் ராஜ் மற்றும் இன்னர்வீல் கிளப் ஆஃப் திருச்சி ராக்போர்ட் தலைவர். மார்கரெட் ஜோசப் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல் நாளான இன்று ஒரே நாளில் மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், முதலுதவிப் பயிற்சி உள்ளிட்ட 10 நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் கிளப் செயலாளர் Rtn. சுப்பிரமணியன், இன்னர்வீல் செயலாளர் பிரியா காசிவிஸ்வநாதன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
