தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் 21.11.2025 அன்று மோடி அரசு அறிவித்த லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாகர் மாவட்ட செயலாளர் வெற்றி செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, மாநிலக் குழு உறுப்பினர் ஜெயசீலன், புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித், மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் விவேகானந்தன், கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கனியமுதன், மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் அன்பு செல்வன். வடக்கு புறநகர் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் சக்திஆற்றல் அரசு, சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாநில நிலைக்குழு உறுப்பினர் ஞான தேசிகன், மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
