திருச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நிறுவனர் அரசகுமார் தலைமை தாங்கினார். தனியார் பள்ளிகளின் சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசக்குமார், ஒன்றிய அரசு நான்கு ஆண்டுகள் RTE நிலுவை தொகையை வழஙகாமல் கடந்த சில மாதஙகளுக்கு முன்பு இரண்டு ஆண்டுகளுக்கான தொகையை வழஙகியது. இந்த நிலையில் 2023- 2024 மற்றும் 2024 – 2025 கல்வியாண்டின் RTE நிலுவைத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளார் அதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அந்த தொகையை காலதாமதம் இன்றி பள்ளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திட வேண்டுகோள் வைத்ததுள்ளோம்.

மேலும் தகுதி வாய்ந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும், தனியார் பள்ளிகளில் பணியாற்றுகின்ற ஒரு சில நபர்களின் தவறான நடவடிக்கையால் POCSO வழக்கு பதிவு செய்யப்படும் பட்சத்தில் அதனை முறையாக விசாரணை நடத்தி அவசர கோணத்தில் வழக்கு பதிவு செய்யாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களை மட்டும் கைது செய்யாமல் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் கைது செய்யப் படுகிறார்கள்.

எந்த தவறும் செய்யாதவர்கள் கைது செய்வது தடுக்கும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கட்டண நிலுவை தொகையை அதிக அளவில் பாக்கி வைத்து விட்டு மாற்றுச்சான்றிதழ் வாங்காமல் வேறு பள்ளிகளில் சேர்கிறார்கள். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது எனவே இது போன்றவற்றை தவிர்க்க பள்ளிகளில் சேர மாற்றுச்சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்க வேண்டும் என்றார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். இது தொடர்பாக முதல்வரை சந்தித்து எங்கள் கோரிக்கையை முதல்வரிடம் வைப்போம் என்றார்.
