திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு 229 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார் ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீன லோச்சனி வரவேற்புரை ஆற்றினார் உதவி தலைமையாசிரியர் ரெங்கநாயகி நன்றி தெரிவித்தார்.
