2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 12 ஆண்டுகளாக ஆகியும் இன்னும் பணி வழங்கவில்லை என கோரியும் மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத்தேர்வு என்ற அரசாணை 149-ஐ அரசு வெளியிட்டு உள்ளது அதை ரத்து செய்யக் கோரியும், மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற கோரி

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று 100 வது போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது இதில் 500க்கு மேற்பட்ட TET தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பு வருகின்றனர்
