திருச்சி விடுதி உரிமையாளர்கள் அமைப்பு, கோயம்புத்தூர் விடுதி உரிமையாளர்கள் அசோசியேஷன் உடன் இணைந்து சேவையை திருச்சியில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக விடுதி உரிமையாளர்கள் அமைப்பை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலைகளுக்கான அரசாங்க உரிமம், ஜிஎஸ்டி, வணிக கட்டிட வரி, ஆட்சியர் உரிமம், வணிக மின்சார கட்டணம் உள்ளிட்ட பல முக்கிய கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதை அடுத்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வளங்கள் துறை அமைச்சர் கே என் நேருவை நேரில் சந்தித்து விடுதிகளுக்கான அரசாங்க உரிமம், ஜிஎஸ்டி, வணிக கட்டிட வரி, வணிக மின்சார கட்டணம் மற்றும் ஆட்சியர் உரிமம் ஆகியவற்றில் சலுகைகள் வழங்க வேண்டி திருச்சி மண்டலம் விடுதி உரிமையாளர்கள் அமைப்பு நிர்வாகிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் காளிதாஸ், விஜயகுமார், வீர பெருமாள், கே.கே. பஷீர், ஜெயராஜ், அனுராதா, ஷபானா, அஸ்மி மற்றும் மத்திய அரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
