மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் இன்று முதல் வருகிற 12 ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடை பயணத்தின் தொடக்க விழா இன்று காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்ய நாதன்,திமுக மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி,திருச்சி மத்திய மாவட்ட நகர செயலாளர் அன்பழகன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மதிமுக பொருளாளர் செந்திலதிபன் நன்றி கூறினார். விழாவில் மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொக்கையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டிடிசி சேரன், மணவை தமிழ் மாணிக்கம்,உறையூர் பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
