திருச்சி கலைக் காவிரி நுண்களை கல்லூரி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து இசையமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கம் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் சதீஷ்குமரன் வரவேற்புரை ஆற்றிட கலை காவிரி நூண்கலைக் கல்லூரி இயக்குனர் செயலாளர் அருள் தந்தை லூயிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பாஸ்டின் ராஜ் எழுதிய நாகூர் இ எம் அனிபாவின் இசைப் பணிகள் மற்றும் ஹமீம் முஸ்தபா எழுதிய குரல் எழுத்து ஆகிய நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது இது தான் இந்தியா என்று சொல்லத் தோன்றுகிறது அதிலும் மத நல்லிணக்கத்தோடு நடைபெறுகிறது. இசை முரசு நாகூர் அனிபா அவர்கள் மெல்லிசை பாடகர் என்று சொல்வதைவிட கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரர் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் அதிலும் அவர் ஐயாரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் என்கிற செய்தி மிகப்பெரிய வியப்பை தருகிறது. வருகை தந்துள்ள இளைய சமுதாயம் இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் குறிப்பு அடங்கிய இந்த புத்தகத்தை வாசியுங்கள் அதுமட்டுமல்லாது நம்முடைய முதல்வர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது புத்தகங்கள் வாசியுங்கள் எனக் கூறியுள்ளார். அப்படி யாராவது புத்தக வாசிக்க பழக்கம் இல்லாமல் இருந்தால் இன்றிலிருந்து ஒரு மணி நேரம் ஏன் நாகூர் அனிபா அவர்களின் புத்தகத்தை படியுங்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சராக உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் மதிவாணன், முனைவர் வாசுதேவன், கவிஞர் கலியமூர்த்தி, பேராசிரியர் நெடுஞ்செழியன், நாகூர் ஹனிபா இசைக்குழு கீபோர்டு வாசிப்பாளர் கென்னடி, தோழர் கோவன், அங்குசம் சமூக நல அறக்கட்டளை தலைவர் ஜே டி ஆர் மற்றும் கலை காவேரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
