அகில இந்திய குயவர் உரிமை கட்சி மற்றும் அனைத்து குயவர்கள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. தேசிய தலைவர் சாலை சாதியன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் சாலை செல்வமணி தலைமை வகித்தார். தேசிய பொருளாளர் சாலை மதிமணன் வரவேற்றார். சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மழைக்கால நிவாரண நிதியாக ரூ. 10,000 வழங்க வேண்டும்,குயவர் சமுதாய மக்களின் கல்வி வேலை வாய்ப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்,திருச்சியில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் மாநில மாநாடு நடத்துவது,வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேசிய தலைவருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சாலை செல்வமுத்து நன்றி கூறினார்.
