மால்வாய் கிராம மக்கள், குலதெய்வ குடிப்பாட்டு காணி மக்கள், தங்கவேல், காசிநாதன்,லட்சுமணன்,வேணுகோபால்,பூமிநாதன்,கணேசன்,ராஜபாண்டியன்,ரத்தினவேல்,பூபாலன்,மணிவேல்,செந்தில் சிவா,அகில பாரத பார்க்கவ குல சங்கத் தலைவர் திருமலை ரவி மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று காலையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனதில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் மால்வாய் கிராமத்தில் அய்யனார் பிடாரியார் கருப்பண்ண சாமி தாவா திருக்கோவில் உள்ளது.பால்வாய் கிராம மக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு காவல் தெய்வமாகவும் உள்ளது.இந்தக் கோவில் சுமார் 500 சவரன் ஆபரண தங்கம், இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான உண்டியல் காணிக்கை மற்றும் கோவில் திருப்பணி நன்கொடை தொகையை முறைகேடு செய்த பூசாரிகள் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் நிர்வாகத்தில் இந்து சமய அறநிலைத்துறை தலையீடை நீக்க வேண்டும்.கிராம மக்கள் குடிப்பாட்டு காணி மக்களிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்.முறைகேட்டில் ஈடுபட்ட பூசாரிகளை பணிநீக்கம் செய்து புதிய அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மால்வாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கலெக்டர் அலுவலக சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.மால்வாய் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்