திருச்சி மாநகராட்சி மண்டலம் – 1 பகுதிக்கு உட்பட்ட 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடம் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று திருச்சி மாநகராட்சி 14வது வார்டு மாமன்ற உறுப்பினரும், அதிமுக கொறடாவுமான கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது.

விழாவில் முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம், பகுதி செயலாளர் பூபதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அப்பாஸ், முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன், தலைமைக் கழகப் பேச்சாளர் ஆரி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்