தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அங்கம்மாள், சரபோஜி கல்லூரியில் முன்னாள் முதல்வர் பேராசிரியர் செல்லப்பா பேராசிரியர் முஸ்தபா கமால் பேராசிரியர் வாசுதேவன், மற்றும் பேராசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.
