சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. ஹிந்தி மயமாகுதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த மோடி அரசு குறியாக உள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்து நாங்கள் மட்டுமல்ல இந்தியாவின் பேசப்படுகிற அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது.மோடி அரசு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி ஒரே மதம் என்கிற வகையில் செயல்பட்டு வருவது பன்முகத்தன்மைக்கு ஆபத்தாக போய் முடியும். தேசிய அளவில் அவரவர் தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. என்பதை சுட்டிக்காட்ட விளங்குகிறது.

இரட்டை எஞ்சின் என மோடி பேசியது டெல்லியில் ஒரு இன்ஜின், தமிழ்நாட்டில் ஒரு இன்ஜின் என்று சொல்லுகிறாரா அல்லது தமிழ்நாட்டில் இரண்டு இன்ஜினா என்ற தெளிவு தேவைப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் இயங்குகிறது என சொல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு பின்னடைப்பு ஏற்படுத்தும், அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பழனிச்சாமி தமிழ்நாட்டில் பிரதமரின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்று பேசி உள்ளார். அதிமுக ஆட்சி மலரும் என்ற நிலை மாறி இருப்பது கவலை அளிக்கிறது அதனை எண்ணி கவலைப்படுகிறோம். இன்று பாஜகவில் பிடிக்குள் அதிமுக சென்றுள்ளது. ராமதாஸ் எந்த அணிக்குள் வர வாய்ப்புள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு? அந்த ஆருடம் சொல்வதற்கு எனக்கு எந்த அவசியமும், தேவையும் இல்லை, அது அவருடைய நிலைப்பாடு, அவருடைய கடமை,பொருப்பு அதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை. எங்களை பொறுத்தவரை 2011 தேர்தலுக்கு பிறகு எடுத்த முடிவு. அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகள் இருக்கிற அணிகளில் இடம் பெறுவதில்லை. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ராமதாஸ் அணி திமுக அணியோடு இணைவது குறித்து திமுக தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். அதில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க கூடிய நிலையில் இல்லை. நாங்கள் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்து விட்டோம், அதில் தெளிவாக உள்ளோம். திமுக கூட்டணிக்கு ராமதாஸ் அணி வந்தால் நீங்கள் கூட்டணியில் தொடர்வீர்களா என கேட்டபோது….. 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த முடிவு தான் அதில் என்ன உங்களுக்கு சந்தேகம் அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார். விஜய் பாஜகவோடு எந்த அளவு உறவாடுகிறார் என்பதை நாம் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு நிலை ஆனால் பாஜக தலைமையிலான அரசையோ செயல்பாடுகளையோ அவர் கடுமையாக விமர்சித்தது இல்லை, விமர்சிக்க வேண்டிய இடத்தில் கூட விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழும்புகிறது. இந்த தேர்தலில் விஜய் தனித்து ஒரு அணியை உருவாக்குவார் அல்லது தனித்துப் போட்டியிடுவார் என நினைக்கிறேன். மத்திய அரசு திட்டங்களுக்கு அவர்கள் இதுவரைக்கும் நிதி ஒதுக்கி உள்ளனர். மாநில அரசு திட்டங்களுக்கு கோரிக்கைகளுக்கு அவர்கள் நிதி ஒதுக்கவில்லை. மாநில அரசு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி நிறுத்தி வைத்துள்ளனர். புதிய கல்விக் கொள்கையில் ஒப்பந்தம் போட வேண்டும் அப்படி என்றால் நிதி தருவோம் என அந்த துறையை சார்ந்த அமைச்சர் பேசி உள்ளார். மாநில அரசு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை அவர்கள் ஒதுக்கவில்லை அதைத்தான் தமிழ்நாடு முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார். இரட்டை இலக்கத்தில் கமல் சீட்டு கேட்பதாக கூறப்படுகிறது நீங்கள் எத்தனை இடம் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு மூன்று இலக்கத்தில் கேட்க முடியாத என்பதால் இரண்டு இலக்கத்தில் கேட்போம் என்றார். எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்கு தேவை என்ன என்ற அடிப்படையில் நாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம் எனக் கூறினார். பேட்டியின் போது திருச்சி மண்டல செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், பெரம்பலூர் மpண்டல செயலாளர் கிட்டு ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்