திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது….. என்டிஏ கூட்டணியில் ஒரு வாரத்திற்குள் மேலும் பல கட்சிகள் இணையும் எனக் கூறியிருந்தேன். நேற்றுதான் கூறியிருந்தேன் ஒரு நாள் தான் ஆகியுள்ளது இன்னும் 7 நாட்கள் இருக்கிறது என்றார். ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வெகு நாட்களாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார் அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. பிஜேபியில் ஏதாவது கருத்து இருந்தால் கூறலாம் அடுத்த கட்சியை பற்றி நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. என்டிஏ கூட்டணி மக்கர் என்ஜின் டபுள் எஞ்சின் கிடையாது என கனிமொழி கூறியுள்ளாரே எனக் கேட்டபோது…. கனிமொழி மக்கர் இன்ஜின் எனக் கூறியுள்ளார் ஸ்டாலின் டப்பா என்ஜின் எனக் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் கூட்டணியே இப்போது மக்கராகி போய் உள்ளது திமுகவுடன் காங்கிரஸ் இருக்குமா? அல்லது மக்கர் எஞ்சினாகி போகுமா என தெரியாது. தேர்தல் முடிந்த பின்பு யார் மக்கள் இன்ஜின், யார் டப்பா இஞ்சின், எது வந்தே பாரத் என தெரியவரும் என்றார்.

ஜனநாயகன் திரைப்படம் பிரச்சனைக்கு நான் கருத்து கூற முடியாது பராசக்தி திரைப்படம் வெளிவந்தது அது யாருடைய திரைப்படம் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும் தேர்தல் ஆணையம், ஈடி, சென்சார் போர்ட் இவை அனைத்தும் சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பு. ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தால் மட்டுமே எதற்காக கட் செய்துள்ளனர் என தெரியவரும். பராசக்தி ரீலிஸ் ஆனது அதற்கு யாரும் கருத்து கூற மாட்டேன் என்கிறீர்கள் ஜனநாயகன் திரைப்படத்திற்கு மட்டும் பெரிய விளம்பரத்தை தேடி கொண்டு உள்ளீர்கள் என்றார். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தால் ஊழல் இருக்காது என விஜய் கூறியுள்ளாரே எனக்கே கேட்டபோது இது உங்களுக்கே சிரிப்பாக தெரியவில்லையா என்றார். தற்போது ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறதா என கேட்டபோது…. எவ்வளவு ஊழல் நடக்கிறது என்பதை ஆதாரத்துடன் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கொடுத்துள்ளார். 4000 கோடிக்கு மேல் இங்கு ஊழல் நடந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கொடுத்துள்ளார். 30 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவதாக கூறப்படுகிறது என கேட்டபோது பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
