தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் மருத்துவமனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் திருச்சி வயலூர் ரோடு சீனிவாசா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் எலும்பு அடர்த்தி பரிசோதனை, ரத்தத்தின் அளவு கண்டறிதல், சக்கரை நோய் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை, நீரழிவு நரம்பியல் சோதனை, ரத்தத்தின் உப்பு அமிலம் அளவு கண்டறிதல் அதேபோல் எலும்பு முறிவு, மூட்டு வலி, பொது மருத்துவம், சர்க்கரை நோய், நுரையீரல் நோய், தோல் நோய், காது மூக்கு தொண்டை சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை மற்றும் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்ற நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த மாபெரும் மருத்துவ முகாமில் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஷன் ராஜ், தோல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் விக்னேஷ் குமார், குழந்தைகள் மற்றும் பொதுநல மருத்துவர் டாக்டர் மஞ்சு, பொது மருத்துவர் டாக்டர் ஞானசேகரன், பொது மற்றும் சக்கர நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ராமநாதன், நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர் அனுசுயா, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அழகம்மை ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த மாபெரும் மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோஷன் ராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தற்போது காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதிய உடற்பயிற்சியின்மை உணவு பழக்க வழக்கங்கள் உள்ளவிட்டவைகளால் எலும்பு தேய்மானம் மூட்டு வலி ஆகியவற்றில் சிக்கி தவித்து உடல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் அதிநவீன இருசக்கர வாகனங்களை குனிந்த படி முறையாக அமர்ந்து வாகனம் ஓட்டாததால் முதுகு வலி எலும்பு தேய்மானம் வருவதற்கு காரணமாக அமைகிறது என தெரிவித்தார்.
