மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை உணவு வழங்கும் விழாவானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட நிலையில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் 3ல் உள்ள 13 வார்டுகளில் பணிபுரியும் 559 தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று இரவு தூய்மை பணியில் ஈடுபட்ட 50 தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கி துவக்கி வைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மண்டலம் 3ன் தலைவர் மதிவாணன், மண்டலம் 3ன் உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராம், சுகாதார அலுவலர் தலைவிரிச்சான், மேலும் மாமன்ற உறுப்பினர்களான நீலமேகம், செந்தில், ரமேஷ், தாஜுதீன் கார்த்திக், சிவகுமார், பியூலா மாணிக்கம், சீத்தாலெட்சுமி, சுரேஷ் மற்றும் மண்டலம் 3ன் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்