திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் தமிழகத்தில் பட்டியல் சமூகமக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமையான தி.மு.க கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகவும் மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பி நிதியை பட்டியல் மக்களுக்கு ஒதுக்காமல் திருப்பி அனுப்பவும் அவல நிலையை கண்டித்தும்

இட ஒதுக்கீட்டில் உரிமைகளை மதிக்காமல் ஆட்சி செய்யும் தி.மு.க.அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் மணிவேல் தலைமையில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ஒண்டி முத்து முன்னிலையிலையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் மற்றும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி ஆகியோர் தலைமையில் கழக அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன் சிறுபான்மையினர் நல பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான், புரட்சித்தலைவர் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அமமுக, பாமக, தாமாக, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
