திருச்சி சில்வர் லைன் மருத்துவமனை தனது நவீன மேம்பட்ட கேத் லேப் மற்றும் தென் தமிழ்நாட்டில் முதல் ரோபோட்டிக் இதய நிறுவனத்தை இன்று துவங்கியது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த மேம்பட்ட கேத் லேப் மூலம் மாரடைப்பு நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை வழங்க முடியும். ஆஞ்சியோ பிளாஸ்டி, ஆஞ்சியோகிராம், சிக்கலான அஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகள் மற்றும் பல்வேறு இதய சாதனங்கள் பொருத்துதல் போன்ற சேவைகள் விரைவாக வழங்கப்படுவதால் உயிர் காக்கும் சிகிச்சையில் ஏற்படும் தாமதம் குறைக்கப்படும்.

புதிய ரோபோட்டிக் இதய நிறுவனம் மூலம் தென் தமிழ்நாட்டில் முதன் முறையாக ரோபோட்டிக் உதவியுடன் இதய சிகிச்சைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த இரத்த இழப்பு , சிறிய அறுவை சிகிச்சை வெட்டுகள், குறைந்த வலி , மிகக் குறைந்த காயமுறிவு மற்றும் விரைவான குணமடைதல் போன்ற பலன்கள் கிடைக்கும். மேலும் சில்வர் லைன் மருத்துவமனை மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளை அணுகி மாணவர்களுக்கு கார்டியாக் அரெஸ்ட் அல்லது அவசர நிலைகளில் உயிர் காக்கும் சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளும் பயிற்சியை வழங்கும் முயற்சியையும் மருத்துவமனை மேற்கொண்டுள்ளதாக மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்