திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அரசூர் கிராமத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை மார்ச் 1-ம் தேதியை முன்னிட்டும் திருச்சியில் மார்ச் 9 ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டிற்கு அழைக்கும் வகையிலும்

 புள்ளம்பாடி ஒன்றிய முன்னாள் திமுக இளைஞரணி செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன் ராமசாமி தலைமையில் கீழரசூர் ஊராட்சி திமுக கிளை கழக முன்னாள் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் சார்பில் வாழ்த்து விளம்பரம் வைக்கப்பட்டது.

மேலும் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு ஏராளமானோர் திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்