‎தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும், கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,வீணாக கடலில் கலக்கும் மழை நீரை தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும், மேகதாது அணையை கட்ட விடக்கூடாது , அழியும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‎பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் அய்யாக்கண்ணு…. நான் 35 ஆண்டுகளாக பிஜேபி, ஆர் எஸ் எஸ் ல் இருந்தேன் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை இல்லை டெல்லியில் சென்று போராடு என மோடி என்னிடம் 6 முறை பேசி உள்ளார், நாங்கள் 10 முறை டெல்லி சென்று போராடியுள்ளோம். 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகும் விவசாயிகளுக்கு லாபகரமான விலை அளிக்கவில்லை, அதனை தொடர்ந்து 2017ல் மீண்டும் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது எங்களிடம் விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருகிறோம் என சொன்னார்கள் ஆனால் தரவில்லை.

‎எங்களை டெல்லி சென்று போராடவும் அனுமதிப்பதில்லை, ஆகையால் வருகின்ற 11ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை தரும்போது அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். விவசாயிகளை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என்றால் அங்கேயே கழுத்தை அறுத்துக் கொள்ளக்போகிறோம். ஜனநாயக நாட்டில் பேசுவதற்கு , கேட்பதற்கு, எழுதுவதற்கு உரிமை இருக்கிறது. ஒரு பக்கம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கல்வி கடன்களை தள்ளுபடி செய்யாமல் உள்ளார், ஒரு பக்கம் மோடி லாபகரமான விலை தருகிறேன் என்றார் ஆனால் செய்யவில்லை. எங்களை காப்பாற்ற வேண்டிய அரசியல்வாதிகள் காப்பாற்ற மறுக்கிறார்கள். ஆகையால் மார்ச் 11ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட உள்ளோம் காவல்துறை அனுமதி மறுத்தால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள உள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்