‎இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுயமரியாதை, சமத்துவம்,சமூகநீதி, மதச்சார்பின்மை, மொழி உரிமை கொள்கைகளை சட்டமாக்கி பெரியார் அண்ணா ஆகியோரின் கனவுகளை நினைவாகிய கருணாநிதியின் வாரிசாக விடியலின் வேந்தராக நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சி தொடர இந்திய சோசியலிஸ்ட் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவை அளிக்கிறது.

மு க ஸ்டாலின் மீண்டும் முதல்வராக நாங்கள் முழு பலத்துடன் செயல்படுவோம்.திமுக மீது அவதூறுகளை இட்டுக்கட்டி திரைக்கதை எழுதும் புதிய நடிகர்களையும்,நீலி கண்ணீர் வடிக்கும் உலக மகா நடிகர்களையும் வீழ்த்துவோம்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற அயராது உழைப்பது என எங்கள் கட்சியை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம் திராவிட இயக்கத்தில் வளமான ஆட்சியின் அடையாளமாக விளங்கும் மு க ஸ்டாலின் தூய தொண்டு தொய்வின்றி தொடரட்டும் அதற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது நிர்வாகிகள் முனைவர் அப்துல் ரகுமான், முருகு தேவி நாச்சியார், எம். ஆர். மெகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்