திருச்சி அதிமுக கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜசேகரன் இன்று மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த பின் மலைக்கோட்டை, என் எஸ் பி ரோடு தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து இபி ரோடு அருகே தேர்தல் பணிமனை திறக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிழக்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், பாஜக மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து,

அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் அவர்களுக்கு பேராசிரியர் தமிழரசன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பகுதி செயலாளர் மலைக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
