அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரன் அவர்களின் தேர்தல் அலுவலகம் தில்லைநகர் 7 வது கிராஸ் மெயின் ரோட்டில் அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் திறந்து வைத்தார்,

அதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக பொதுச்செயலாளர் காளீஸ்வரன், அதிமுக பகுதி செயலாளர் பூபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்