திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ரயில்வே பணியாளர்களிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் திருச்சி மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி, கொட்டப்பட்டு, மலையடிவாரம், பேன்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் மதிவாணன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் ரமேஷ், தேமுதிக பொருளாளர் மில்டன் குமார், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் பிரீத்தா விஜய்ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்