அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆதரவு பெற்ற அமமுக வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொது மக்களிடையே பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று மாலை திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு, காவேரி நகர், வடிவேல் நகர், டாக்கர் பங்களா, காமாட்சி அம்மன் கோவில் தெரு, அக்கரகாரம், சௌராஷ்டிரா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அருகில் அதிமுக உறையூர் பகுதி செயலாளர் பூபதி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்