இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFl) திருச்சி புறநகர், திருவெறும்பூர் ஒன்றியம், பூலாங்குடி காலனி கிளை மற்றும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருந்துவமனை இரத்த வங்கியோடு இணைந்து இரத்ததான முகாம் அரசு ஆரம்ப பள்ளியில் முகில் கிளை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் இராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)மாநிலசெயற்குழு உறுப்பினர் லெனின்,திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், திருவரம்பூர் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றிய கமிட்டி நிர்வாகிகள், பழங்கனாங்குடி கிராம நிர்வாக அலுவலர் மோகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கொரொனா கட்டுப்பாடு விதிகளுடன் இரத்த வங்கி மருந்துவ அலுவலர் குழுவினருடன் இரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரத்த வங்கி ஆற்றுனர் பாலசந்தர் ஒருங்கிணைப்புடன் இரத்ததான முகாம் நடைபெற்றது. இரத்த தட்டுப்பாடு நேரத்தில் பூலாங்குடி DYFI கிளை சார்பில் இரத்த தானம் 17 யூனிட் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.