திருச்சியில் டாக்டர் கே. சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை இணைந்து SBCF MAMMORUN 2026 மாரத்தான் போட்டியை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த மாரத்தான் குறித்து டாக்டர் கோவிந்தராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 21.1 கிலோமீட்டர் அரை மாரத்தான் மற்றும் 5 கிலோமீட்டர் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது.

21.1 கி.மீ. ஓட்டம் அதிகாலை 5 மணிக்கு மாம்பழச்சாலை பகுதியில் இருந்தும், 5 கி.மீ. ஓட்டம் காலை 7 மணிக்கு தென்னூர் உழவர் சந்தையில் இருந்தும் தொடங்குகிறது. 5 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முன்பதிவு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் பரிசுத்தொகை மொத்தம் 3 லட்சம் ரூபாய் எனவும், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறக்கட்டளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்