திருச்சி, உறையூர் பகுதியில் அமைந்துள்ள தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி மற்றும் 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளி செயலாளர் நீல்ராஜ் தலைமை ஏற்று மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார் . மேலும் பள்ளியில் முதன் முதலாக சேர்ந்த குழந்தைகளுக்கு செயலாளர் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கூறி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் நம் பாரம்பரிய முறைப்படி வித்யாரம்பம் விஜயதசமி விழாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கைப்பிடித்து தாய்மொழியான தமிழில் ‘அ’ மற்றும் ‘ஓம்’எழுதி குழந்தைகளின் கல்வியை சிறப்புடன் தொடங்கி வைத்தனர். பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்