திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பகுதி தலைவர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் – கவுன்சிலர் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சி கட்டமைப்பு மற்றும் தெருமுனை கூட்டம் குறித்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் : 1. புதிதாக தேர்வாகியுள்ள பகுதி தலைவர்கள், பகுதியில் உள்ள தேசிய – மாநில – மாவட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். 2. பகுதி கமிட்டி புதிய நிர்வாகிகள் அமைத்து வெளியிட வேண்டும். 3. மண்டல கமிட்டிக்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் புதிய கிளை தலைவர், கிளை பிரதிநிதி மற்றும் வாக்குச்சாவடி முகவர்களை அறிவிக்கவேண்டும். 4. மண்டல வாரியாக தெருமுனை கூட்டம் நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும்.

நிகழ்வில் மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி, சர்க்கிள் தலைவர்கள் ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, மலைக்கோட்டை அஞ்சு, பாலக்கரை ராஜா முகமது பிலால், ஏர்போர்ட் கனகராஜ், ஜங்ஷன் பிரியங்கா படேல், உறையூர் கிருஷ்ணன், பொன்மலை அழகர் மற்றும் காட்டூர் ராஜா டேனியல் ராய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
