திருச்சி மாவட்டம் தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-எங்கள் சங்கத்தை சேர்ந்த தரைக்கடை சிறு கடை வியாபாரிகளும் மற்ற சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் திருச்சி என்.எஸ்.பி.சாலை தெப்பக்குளம் தேரடி பஜார் பெரிய கடை வீதி போன்ற பகுதிகளில் தடைகளைப் போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள்.கடந்த ஆண்டு காலகட்டத்தில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது தான் இயல்பு நிலைக்கு ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் மாநில அரசும் ஊரடங்கு அறிவித்துள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஏற்கனவே நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பண்டிகை காலத்தில் தான் நாங்கள் மீண்டும் வியாபாரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. எனவே பண்டிகை காலத்தை கருத்தில்கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எங்களின் தடைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாங்கள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் இவர் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சிவா, அண்சர்தின், பிரகாஷ், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மலைக்கோட்டை சுற்றியுள்ள வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் பல்வேறு விதமான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கடனில் தத்தளிக்கும் சூழ்நிலையில் மீண்டும் கடையடைப்பு என்ற உத்தரவு மீண்டும் வியாபாரிகள் நெருக்கடியான சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனவே மழைக் கோட்டைப் பகுதியை சுற்றியுள்ள தரைக்கடை மற்றும் ரெடிமேட் போன்ற சிறுகடை வியாபாரிகள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளி பின்பற்றி வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு கேட்டு மனிதநேய அனைத்து வர்த்தக சங்கத்தின் மாவட்ட தலைவர் கபீர் அஹமது தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க இன்று வந்தனர்.