தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அரசு மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்க நேரம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் முக கவசம் அணியாமல் மது பிரியர்கள் மது வாங்க அரசு மதுபான கடையில் சமூக இடைவெளியின்றி மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக இன்று முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்.