திருச்சி மாநகராட்சி 47, 48 வது வார்டுக்குட்பட்ட கூனிபஜார் பகுதியில் இடிந்து கிடக்கும் பொது கழிப்பிடத்தை புதிதாக கட்டி தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்ட இடத்திற்கு காவல்துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையில் அதே இடத்தில் இன்னும் 15 தினங்களில் புதிய கழிப்பறை கட்ட கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு மாத காலத்திற்குள் நிறைவடையும் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று எழுத்து பூர்வமாக ஒப்பந்தம் போடப்பட்டதையொட்டி போராட்டம் கைவிடப்பட்டது. மக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட து.தலைவர் கிச்சான், பகுதி செயலாளர் சேதுபதி, கிளை நிர்வாகிகள் தீபன், பிரபாகரன், வினோத் ஆகியோர் பங்கேற்றனர்.