திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு விற்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு கடையை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 125 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து திருச்சி கோட்டை காலத்தில் புகார் அளிக்கப்பட்டது மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக அவர்மீது மாநகராட்சி அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.