திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே குட்செட் யார்டில் வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் வரும் அரசி, நெல், விவசாயத்திற்கு தேவையான உர மூட்டைகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக லாரிகள் அதே பகுதியில் உள்ள காலி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த காலி இடத்தை திருவேங்கடம் என்பவர் லாரி பார்க்கிங் செய்வதற்காக டெண்டர் எடுத்ததாகவும், லாரிகள் நிறுத்துவதற்கு பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் லாரி உரிமையாளர்கள் கிளினர்கள் நல சங்கம் தலைவர் சங்கர் லாரி பார்க்கிங் டெண்டர் ஒனரான திருவெங்கத்திடம் நேரில் சென்று நீங்கள் டெண்டர் எடுப்பதற்கான அனுமதியை சான்றிதழை காட்டுங்கள் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் நடந்த சண்டையில் தலைவர் சங்கர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இன்று விடியற்காலை தலைவர் சங்கரிடம் போலீசார் விசாரணைக்காக காவல்நிலையம் வரவழைத்துள்ளனர். காவல் நிலையம் வந்த அவரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து, லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளினர்கள் நல சங்த்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைவர் சங்கரை விடுதலை செய்யக்கோரியும், கொலைவெறியுடன் தாக்கிய லாரி பார்க்கிங் உரிமையாளர் திருவேங்கடத்தை கைது செய்யக்கோரி, கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.