தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 2 வாரங்களுக்கு வருகிற செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஊரடங்கின் தளர்வாக நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று திரையரங்குகள் தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.