திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்எம்எஸ் காலனியில் செயல்பட்டு வந்த BIPIN மல்டி ஸ்பெஷலிஸ்டில் தற்போது புதியதாக விரிவாக்கப்பட்ட குரூப் ட்ரெய்னிங் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.
சினிமா நடிகர்கள், அரசியல் பிரமுகர் போன்ற பிரபலமானவர்கள் மட்டுமே பெறக்கூடிய இப்பயிற்சியினை சாதாரண பொதுமக்களும் பெரும் வகையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக யோகா தெரபி, ஜும்பா, பிட்னஸ் பாக்ஸிங், உடல் பயிற்சி மூலம் உடல் எடை குறைக்கும் பயிற்சி, பாடி பில்டிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அனைத்தையும் யு.கே.வில் உள்ள YMCA வில் மாஸ்டர் ட்ரெய்னர் லேவல் 5 பட்டம் பெற்ற முன்னாள் இந்திய கடற்படை சிறப்பு படை தளபதி மற்றும் மிஸ்டர் இந்தியாவான உன்னி கிருஷ்ணன் (இந்த மையத்தின் உரிமையாளர்) அவர்கள் சிறப்பான பயிற்சிகளை அளிக்கிறார்.
இந்த குரூப் ட்ரெய்னிங் பிட்னஸ் சென்டர் திறப்பு விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன்,முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வம், உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திர குமார்,மிஸ்டர் தமிழ்நாடு சிவராம சுதன் மற்றும் பிபின் உடற்பயிற்சி கூடத்தில் பயின்ற,பயிற்சி எடுத்து வருகின்ற நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.