தமிழகத்தில் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.காலை முதல் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 540 பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதில் 224 அரசு பள்ளிகளில் 3,675 ஆசிரியர்களும், 206 தனியார் பள்ளிகளில் 4,473 ஆசிரியர்களும், 110 உதவி பெறும் பள்ளிகளில் 2,312 ஆசிரியர்களும்,
என்று மொத்தம் 10 ஆயிரத்து 460 ஆசிரியர்களும் , 1,773 ஆசிரியரல்லாத பணியாளர்களும், பணியாற்றுகின்றனர். இன்று காலை முதல் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்த பிறகே ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளே செல்ல அனுமதி அளித்து வருகிறார்கள்.
மேலும் பள்ளியின் நுழைவுவாயிலில் கையை சுத்தம் செய்யும் கிருமி நாசினி வைக்கபட்டுள்ளது. குறிப்பாக வகுப்பு அறையில் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமரும்படி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்ய பட்டுள்ளது என்றும் , அரசு கூறிய வழிக்காட்டுதலை முறையாக பின்பற்றபட்டுள்ளது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.