ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு நேற்று முதல் துவங்கியது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் தொடங்க கால அவகாசம் வழங்கி தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி வளாகத்தில் தேர்வு எழுத வந்த ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து இன்று செப்டம்பர் 3 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவி கூறுகையில் பல்கலைக்கழக இயக்குனருக்கும் ஆசிரியருக்கும் இடையில் உள்ள பிரச்சினையில் நாங்கள் எழுதும் நேரடியான தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு நடக்கிறது. 2018 முன்னர் வரை தேர்வு எழுதியவர்கள்
தேர்ச்சி பெற்றனர்.ஆனால் பழகடந்த 4 ஆண்டுகளாக தேர்வு எழுதயவர்கள் தேர்ச்சி பெஃறுவதில் பெறும் சிரமம் இருப்பதாகவும் விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் இருப்பதாகவும்.இதனால் நேரடி வகுப்புகள் தொடங்கி ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என கூறினர்.