இந்தியாவில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைவுகூரும் விதமாகவும், ஆசிரியர்களைப் போற்றும் விதமாகவும் நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணமானவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 இல் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதோடு அவர் ஒரு தீவிர கல்வியாளராகவும், புகழ்பெற்ற சிறந்த ஆசிரியராகவும் செயல்பட்டார்.
எப்போதும் ஆசிரியர்கள் சிறந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்பதற்காக டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயந்தி, ஆசிரியர் புஷ்பலதா மற்றும் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பி.ஜோ.கி ஜெயராணி ஆகியோருக்கு அப்துல் கலாம் புத்தகம் மற்றும் மலர் கொடுத்து ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் கூறிய மாணவ மாணவிகள்.